பெரிய படங்கள் OTT வழியாக வெளியானால் இதுதான் நடக்கும் என பதிவிட்டுள்ளது பிரபல தியேட்டர் ஒன்று.
Tamil Movies Release in OTT : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளது. சினிமாத் துறைக்கும் இதே நிலைதான்.
தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டுள்ளதால் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன் மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது.
இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியேட்டர் உரிமையாளர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லையில் உள்ள ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் இது குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.
ஹாலிவுட் சினிமாவில் உருவாகும் படங்கள் OTT வழியாக வெளியாவதில்லை. பெரிய பட்ஜெட் படங்கள் இதன் வழியாக வெளியாவதில்லை.
ஒருவேளை அந்த படங்களும் இதன் வழியாக வெளியானால் இந்த பிளாட்பார்ம்களின் அனுமதி நுழைவுக் கட்டணமும் ( Subscribe Charge ) உயர்த்தப்படும்.
தியேட்டரில் படம் பார்ப்பதற்கு செலுத்தும் கட்டணத்திற்கு ஈடாக தான் செலுத்த வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
If OTT gonna bring down cinema let me say one thing, still Hollywood not releasing their movies into OTT nor any big budget films around the world. If that happens, I mean if OTT platforms bought a movie like Avatar 2, probably the subscription cost will change cont
— Ram Muthuram Cinemas (@RamCinemas) April 27, 2020