Tamil Movies in Golden Globe 2020

கோல்டன் க்ளோப் திரையிடலுக்கு தமிழிலிருந்து சூரரைப்போற்று மற்றும் அசுரன் என இரண்டு திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது.

Tamil Movies in Golden Globe 2020 : சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் சிறந்த படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை திரையிட்டு கவுரவிக்கும் நிகழ்ச்சி தான் கோல்டன் க்ளோப்.

இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது.

பொதுவாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு எடுத்துக்கள்ளப்படும். ஆனால் இந்த வருடம் கொரானா வைரஸ் தொற்று காரணமாக பல படங்கள் OTT தளத்தின் வழியாக வெளியாகின‌.

இதனால் OTT வழியாக வெளியான படங்களும் இந்த வருடம் ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த அசோஷியேஷன் அறிவித்திருந்தது.

இதனையடுத்து இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு திரைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் தேர்வான படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த லிஸ்டில் தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் தனுஷின் அசுரன் மற்றும் சூர்யாவின் சூரரைப்போற்று ஆகிய இரண்டு திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.