Tamil Maruthuvam Tips : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Tamil Maruthuvam Tips :

# குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் உடல்ரீதியாக சந்திக்கும் சிரமங்கள் பல. அதில் வரட்டு இருமல், சளி, கபம் போல நம்மை சிரமத்திற்கு உள்ளாக்கும்.

# உண்ணும் பொழுது இருமல், உண்டபின் வாந்தி, தூங்கியபின் இருமல் என பாடாய்படுத்தி விடும்.

# துளசி சாற்றினை சரியான பதத்தில் தேனில் கலந்து நல்ல மருத்துவ குணங்களுடன் கிடைக்கும் இந்த துளசி தேனை பயன்படுத்தியும் மகத்துவம் பெறலாம்

# வரட்டு இருமலுக்கு மிகச் சிறந்த வைத்திய முறை என்றால் அது தொண்டையை மென்மையாக்கி இருமலின் தாக்கத்தை குறைத்து உடல் தன்னை தானே சரி செய்து கொள்ளும் வரை அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்வதுதான்.

# அதேபோல் கபம் சளி ஆகியவற்றைக் துளசியுடன் சேர்த்து தேனினை குடித்தால் தொண்டையை மென்மையாக்கி கபத்தை எளிமையாக கரைத்துவிடும்.

# சுத்தமான துளசி தேனை சுடு நீரில் கலந்து இருமல் அதிகம் இருக்கும்போது பருகவேண்டும். பால், காபி குடிக்கும் பொழுது வெள்ளை சர்க்கரைக்கு பதில் துளசிதேனை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

வானில் அனைத்து நட்சத்திரங்களும் உள்ளபோது, அருந்ததியை மட்டும் திருமணச்சடங்கின் போது மணமக்கள் பார்ப்பது ஏன்? தெரியுமா உங்களுக்கு?.

# பெரியவர்கள் துளசிதேனை அப்படியே ஒரு தேக்கரண்டி அளவு தினமும் இரண்டு வேளை உண்டு வரலாம். தேனைப் போல தொண்டையை மிருதுவாக்கும் பணியை வேறு எந்த மருந்தாலும் செய்ய இயலாது. எனவே நமக்கு இருமல் சளி வந்தவுடன் மருத்துவரிடம் ஓடாமல் துளசி தேனை கொடுத்து கட்டுக்குள் வைக்க முயல்வது நலம்.

# சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

# துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here