ஒரே நேரத்தில் தெலுங்கு சினிமாவிற்கு தாவியுள்ளனர் மூன்று இயக்குனர்கள்.
Tamil Directors in Telungu : தமிழ் சினிமாவை சார்ந்த பல நடிகர் நடிகைகள் மற்றும் இயக்கத்தில் சினிமாவிற்கு வழக்கமாகி வருகிறது. தமிழ் சினிமாவைப் போலவே தெலுங்கிலும் நடிகர்-நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் அதிக சம்பளம் கொடுக்கின்றனர்.
இதனால் தற்போது ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் தெலுங்கு சினிமாவின் பக்கம் படையெடுத்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சங்கர் :
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
லிங்குசாமி :
தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் லிங்குசாமி தற்போது ராம் போதினேனி என்பவரை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
முருகதாஸ் :
அதேபோல் தமிழ் சினிமாவில் தளபதி விஜயை வைத்து தளபதி 65 படத்தை இயக்க இருந்து பின்னர் அந்த வாய்ப்பை நழுவ விட்டார் முருகதாஸ். தமிழ் நடிகர்கள் யாரும் அவருக்கு வாய்ப்பு தராத நிலையில் அவரின் தெலுங்கு சினிமா பக்கம் படை எடுத்துள்ளார். இவர் இயக்கும் தெலுங்கு படத்தில் ராம் போதினேனி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.