பிரபல நடிகர் மயில்சாமி உடல் நலக் குறைபாடு காரணமாக இன்று காலமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி மற்றும் குணசித்திர வலம் வந்தவர் மயில்சாமி. தற்போது 57 வயதாகும் இவர் பல்வேறு நடிகர்களுடன் இணைந்து கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று மரணம் அடைந்தார். இவரது மறைவு செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.