Tamil Celebrities Death for Covid19

நடிகர் பாண்டுவின் தொடர்ந்து அடுத்தடுத்து 2 தமிழ் திரையுலக பிரபலங்கள் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Celebrities Death for Covid19 : சீனாவின் ஹுகான் மாநிலத்தின் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

இன்று அதிகாலையில் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காமெடி நடிகர் பாண்டு உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து மேலும் இரண்டு பிரபலங்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் டி ராஜேந்தர் அறிமுகமான ஒரு தலை ராகம் என்ற படத்தை தயாரித்தவர் இப்ராஹிம். இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு குறித்து டி ராஜேந்தர் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் 1980ம் ஆண்டு வெளியான என் முதல் படமான ‘ஒரு தலை ராகம்’ படத்தின் தயாரிப்பாளர் திரு E.M.இப்ராஹிம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது.

மீளா அதிர்ச்சிக்கு உள்ளானேன், காரணம் அவர் அரங்கக்குடியில் பிறந்தவர். என்னை திரையுலகிற்கு அரங்கேற்றம் செய்தவர் வடகரை பக்கத்தில் வாழ்ந்தவர் என் திரையுலக வாழ்க்கை படகை கரை சேர்த்தவர். இன்று ஏன் மறைந்தார். இந்த உலகை விட்டு பிரிந்தார்.

கண்ணீர் கண்களை நனைக்கிறது என் மனம் கடந்த காலத்தில் அவரோடு வாழ்ந்த காலத்தை நினைக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.

அதேபோல் ஆட்டோகிராப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலை பாடிய பாடகர் கோமகன் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு பெரும் சோகத்தை அளிப்பதாக சேரன் தெரிவித்துள்ளார்