Tamil Actress Salary 2020
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் கசிந்துள்ளன.

Tamil Actress Salary 2020 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் என நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், என பலரின் பெயர்களை சொல்லி கொண்டே போகலாம்.

தங்களின் மார்கெட்டிற்கு ஏற்ப நடிகைகள் சம்பளங்களையும் உயர்த்தி கொண்டே செல்கின்றனர்.

திரையுலகிற்கு வந்து பல வருடங்கள் ஆயினும் இன்னும் மவுசு குறையாமல் இருக்கும் நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ 3 முதல் ரூ 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

ஸ்ருதி ஹாசனுக்கு தற்போது தமிழில் மார்க்கெட் இல்லை என்றாலும் தெலுங்குவில் நல்ல பீக்கில் இருக்கிறார். இதனால் இவர் ரூ 1 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

மகா நதி படத்தின் மூலமாக மாபெரும் ஹிட் கொடுத்த கீர்த்தி அஜித், கமலை தவிர அத்தனை நடிகர்களுடனும் இணைந்து நடித்து விட்டார் எனலாம். இவருக்கு ரூ 1 கோடி சம்பளம் பெறுகிறார்.

இப்போதும் இவ்வளவு அழகா? முன்னணி நடிகையாக வலம் வந்த கிரணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

தெலுங்குவில் உச்ச நடிகையாக இருந்து வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழிலும் கோலோச்ச தொடங்கியுள்ளார். இவரும் 1 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். பிஸியான நடிகையாக இருந்து வரும் இவர் ஒரு படத்திற்கு ரூ 2 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.

திருமணத்திற்கு பின்னரும் கியூட் நடிகையாக வலம் வரும் சமந்தாவும் ஒரு படத்திற்கு ரூ 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.