
பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேவயானியின் முதல் மகள் எடுத்த மார்க் குறித்து தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் தேவயானி. தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது படங்களில் குணசேத்திர வேடங்களில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து முடித்ததை தொடர்ந்து தற்போது அதே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் முத்துப்பேச்சி என்ற சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.
இவர் பிரபல இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த வருடம் ஃபர்ஸ்ட் தேர்வு எழுதிய தேவயானியின் மூத்த மகளின் மதிப்பெண் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

ஆமாம் தேவயானியின் மூத்த மகள் 12 ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 498 மதிப்பெண்கள் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரசிகர்கள் பலரும் தேவயானியின் மூத்த மகளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.