Failure Movies From Tamil Actors His Own Directions
முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் ஆசையில் படங்களை இயக்கி தோல்விகளை கண்டுள்ளனர். அவை என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

திரையுலகில் நுழைபவர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாக, இயக்குநராக, தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்ற ஆசையில் இறங்கி படு தோல்வியை சந்தித்த வரலாறு அதிகமுண்டு.

அப்படி முன்னணி நடிகர்கள் ஹீரோவாக அவதாரம் எடுத்து தோல்வியை தழுவிய படங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

1. சத்யராஜ் இயக்கி நடித்த வில்லாதி வில்லன் திரைப்படத்தின் பாடல்கள் பெற்ற வரவேற்பை கூட படம் பெறவில்லை. இதனால் இப்படம் பெரும் தோல்வியை தழுவியது.

2. விஜயகாந்த் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராக ஆசைப்பட்டு விருதகிரி என்ற படத்தை இயக்கினார். ஆனால் இறுதியில் மிஞ்சியது ஏமாற்றம் தான்.

3. சரத்குமார் தன்னுடைய மனைவி ராதிகாவின் தயாரிப்பில் தலைமகன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். ஆனால் வெற்றி என்பது படத்தின் தலைப்பில் மட்டும் தான் இருந்தது. நிஜத்தில் கிடைக்கவில்லை.

4. வள்ளி திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் கதை எழுதி இருந்தார், ஆனால் இந்த படமும் தோல்வியை தான் தழுவியது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.