
கவலைக்கிடமான நிலையில் பிரபல தமிழ் நடிகர் இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சரத்பாபு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.

திறமையான நடிகர்களில் ஒருவராக வலம் வந்த இவர் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் இவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சிகிச்சை பெற்று ஓரளவு உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.
இந்த நேரத்தில் நேற்று மீண்டும் இவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாகவும் சிகிச்சை பெற்ற பிறகு அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அறிக்கை வெளியானது.

இந்த சமயத்தில் தற்போது சரத் பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சிறுநீரகம் கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதன் காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவலால் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சோகமடைந்துள்ளனர். அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.