நடிகை தமன்னா தனது திருமணம் குறித்து வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். 32 வயதை தொட்டிருக்கும் இவர் தற்போது வரை சிங்கிளாகவே இருந்து வந்த நிலையில் தற்போது இவருக்கு பிரபல தொழிலதிபருடன் திருமணம் நடைபெற இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வேகமாக பரவி வந்தது.

திருமணம் பற்றிய வதந்திகளுக்கு… முழுமையாக முற்றுப்புள்ளி வைத்த தமன்னா.!

தற்போது அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை தமன்னா கொடுத்துள்ள விளக்கம் வைரலாகி வருகிறது. அதில் அவர், “தொழிலதிபர், மருத்துவர்களுடன் திருமணம் செய்ய உள்ளேன் என்று என் திருமணம் குறித்து தவறான வதந்திகள் வருகின்றன. ஆனால் அது அனைத்துமே தவறானது. வாழ்க்கையில் ஒரு அழகான தருணம் என்றால் அது திருமணம் தான். அது நடக்கும் போது அனைவருக்கும் நிச்சயம் தெரியவரும்” என்று கூறியிருக்கிறார். மேலும் தான் திரையுலகில் இன்னும் துவக்க புள்ளியிலேயே இருப்பதாகவும், கவனம் முழுவதும் சினிமாவில் தான் என்றும் அவர் தெரிவித்து இந்த வதந்திகளுக்கு தற்போது ஃபுல் ஸ்டாப் வைத்திருக்கிறார்.