Tamannaah Choice in Bigg Boss House : Many of the participants in the event have entered the film industry | kamal Haasan | Dhanush | Shruti Haasan

நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தால் போட்டியாளராக உங்கள் நண்பர்கள் யாரை அனுப்புவீர்கள் என கேட்டதற்கு தனுஷ் கார்த்தி விஷால் காஜல் அகர்வால் என பிரபலங்களின் பெயர்களை சொல்லி ஆச்சரியமான பதில் அளித்தார் தமன்னா.

Tamannaah Choice in Bigg Boss House :

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பாக கார்த்தி போட்ட மாஸ்டர் பிளான்!

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு,

அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இது ஒரு பக்கமிருக்க நடிகை தமன்னாவிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தால் போட்டியாளராக உங்கள் நண்பர்கள் யாரை அனுப்புவீர்கள் என கேட்டதற்கு தனுஷ், ஸ்ருதி ஹாசன், கார்த்தி, விஷால், காஜல் அகர்வால் என பிரபலங்களின் பெயர்களை சொல்லி ஆச்சரியமான பதில் அளித்தார் தமன்னா.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.