இந்தியன் 2 படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகிக் கொண்ட நிலையில் அவருக்கு பதிலாக நடிக்க வைக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Tamanna Replace Kajal Agarwal in Indian 2 : தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல் ஹாசன். இவரது நடிப்பில் அடுத்ததாக விக்ரம் மற்றும் இந்தியன் 2 என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இந்தியன் 2 திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப் போன நிலையில் மீண்டும் தொடங்கிய போது ஏற்பட்ட பெரும் விபத்து காரணமாக மீண்டும் தள்ளிப் போனது. இதனால் பல்வேறு சிரமங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முயற்சித்து வருகிறது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில் அவர் கர்ப்பம் காரணமாக படத்திலிருந்து விலகிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

கடவுளுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது எது?

இதனால் தற்போது அவருக்கு பதிலாக இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது அவசரமான உலகமடா தம்பி அஷ்வின் – மேடையில் Advice சொன்ன Thambi Ramaiah | HD