நடிகை தமன்னா தனது சமூக வலைதள பக்கத்தில் வித்தியாசமான ஆடையில் புதிதாக எடுக்கப்பட்டிருக்கும் போட்டோ ஷூட் புகைப்படத்தை பகிர்ந்து இணையத்தை கிரங்கடித்து வருகிறார்.

இந்திய திரை உலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர். தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கல்லூரி என்னும் திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்தார். அப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது.

இதையடுத்து நடிகர் தனுஷ் உடன் இணைந்து படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார். கன்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, பாகுபலி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் ,தெலுங்கு , கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களிலும், 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதிக ரசிகர்களை பெற்றுள்ள தமன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் தனது புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து அவர்களை குஷிப்படுத்துவது போன்றவற்றை செய்து வருவார். அந்த வகையில் அவர் தற்பொழுது கருப்பு நிற ஆடையில் பெரிய பிங்க் நிற ரோஜா பூவை போல் வைத்து தைத்து அசத்தலாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அது தற்பொழுது இணையத்தை கிரங்கடித்து வருகிறது.