நடிகை தமன்னா தனது சமூக வலைதள பக்கத்தில் லேட்டஸ்ட் ஆக எடுத்திருக்கும் போட்டோஷூட் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

இந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். பல ரசிகர்களின் கனவு தேவதையாக இருந்து வரும் தமன்னாவின் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே பப்ளி பவுன்சர், பிளான் A பிளான் B, குர்துண்டா சீதாகாலம் என மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.

எதிலும் அழகு எப்பவும் அழகு!!!… தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக் வைரல்!.

இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சிரஞ்சீவியுடன் போல சங்கர், தட் இஸ் மகாலட்சுமி ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் தமன்னா இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷூட் செய்து அசத்தி வரும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் வசப்படுத்தி வருவார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் ட்ரெடிஷனல் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.