விஜய் சேதுபதியை தொடர்ந்து முதல் முறையாக தொகுப்பாளராக களமிறங்க உள்ளார் பிரபல தமிழ் நடிகை ஒருவர்.

Tamanna Host Master Chef : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதனை தொடர்ந்து முதல் முறையாக தமிழில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை கன்னடத்தில் சுதீப் தொகுத்து வழங்க தெலுங்கு நடிகை தமன்னா தொகுத்து வழங்க உள்ளார். நடிகையாக வலம் வரும் தமன்னா முதல் முறையாக தொகுப்பாளினியாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.