தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா இணைந்துள்ளார்.

Tamanaah in Vedhalam Telungu Remake : தமிழ் சினிமாவின் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது திரைப்படங்களில் ஒன்று வேதாளம். இந்த படத்தில் அஜித்துடன் தம்பி ராமையா, லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன் உட்பட பலர் இணைந்து நடித்திருந்தனர்.

சில நேரங்களில், இது பிரச்சினையாக இருக்கிறது : ரோகித் சர்மா

தற்போது இந்த திரைப்படம் தெலுங்குவில் போலோ சங்கர் என்ற பெயரில் ரீமேக் ஆக உள்ளது. அஜித்தின் கதாபாத்திரத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இவர்கள் தொடர்ந்து தற்போது இந்தப்படத்தின் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை தமன்னா. இவர் ஏற்கனவே சிரஞ்சீவியுடன் இருந்து சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக தமன்னா சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொட்டும் மழையிலும் தியேட்டருக்கு Mass Entry கொடுத்த Vishal – வைரலாகும் வீடியோ | HD