சிம்புவுடன் மட்டும் கெமிஸ்ட்ரி செட் ஆகவில்லை என ஓப்பனாக நடிகை தமன்னா பேட்டி அளித்துள்ளார்.

Tamanaah About Chemistry With Simbu : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல நடிகர்களுடன் தொடர்ந்து பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகர்களோடு இணைந்து தமன்னா நடித்து விட்டார் என்றே சொல்லலாம். சிம்புவுடன் இணைந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் வயதான சிம்புவிற்கு ஜோடியாக நடித்தார்.

இந்த நிலையில் தற்போது சிம்புவுடன் இந்த பேட்டி ஒன்றில் சிம்புவுடன் மட்டும் தனக்கு கெமிஸ்ட்ரி செட்டாகவில்லை என கூறியுள்ளார். வயதான சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததால் கெமிஸ்ட்ரி செட்டாகவில்லை. அவருடன் இணைந்து நடிக்க இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான AAA திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.