முதல் பாதி படு மிரட்டலாகவும் இரண்டாம் பாதியில் சில சொதப்பல்கள் உடனும் வெளியாகியுள்ளது டாணாக்காரன் திரைப்படம்.

Taanaakaran Movie Review : ஜெய்பீம் படத்தில் நடித்திருந்த போலீஸ் அதிகாரியாக நடித்த தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லால், அஞ்சலி நாயர், எஸ் எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள திரைப்படம் டாணாக்காரன். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

முதல் பாதி மிரட்டல்.. ஆனால் இரண்டாம் பாதியில் இப்படி பண்ணிட்டீங்களே - டாணாக்காரன் படத்தின் முழு விமர்சனம்

படத்தின் கதைக்களம் : காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் அநீதிகளை வெட்டவெளிச்சம் போட்டு வெளிப்படையாக சொல்லும் கதை களத்தை கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் இந்த டாணாக்காரன். பயிற்சி பள்ளியில் படிக்கும் விக்ரம் பிரபுவுக்கும் இங்கு பயிற்சி ஆய்வாளராக பணியாற்றி வரும் நாள் இருவருக்கும் இடையே ஏற்படும் மோதலும் அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

இயக்குனர் தமிழ் ஒரு காவலர் பயிற்சிப் பள்ளியில் லஞ்சம், ஜாதி ரீதியான பிரச்சனைகள், பயிற்சி பணிகள் நடக்கும் அநீதிகள் உள்ளிட்டவைகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

முதல் பாதி முழுக்க முழுக்க பயிற்சிப் பள்ளியைத் சுற்றியே கதை நகர்கிறது. பெரும்பாலான காட்சிகளில் பயிற்சி மைதானத்திலேயே இடம் பெறுகிறது. ஒரு காட்சி முடியும் முன்னரே அடுத்த காட்சிகளை இணைத்து படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டிக் கொண்டு செல்கிறார் இயக்குனர்.

ஆனால் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த கதை அப்படியே தலைகீழாக மாறுகிறது. லால் அவர்களை விக்ரம் பிரபு எப்படி வீழ்த்துகிறார். இருவருக்கும் இடையே என்ன மோதல் கதையின் பாதையே மாறுகிறது. இது படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது.

முதல் பாதி மிரட்டல்.. ஆனால் இரண்டாம் பாதியில் இப்படி பண்ணிட்டீங்களே - டாணாக்காரன் படத்தின் முழு விமர்சனம்

விக்ரம் பிரபு தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார். நடிகர் லால் படத்திற்கு பெரிய பலமாக உள்ளார். எம்எஸ் பாஸ்கர் எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்.

விக்ரம் பிரபு மற்றும் அஞ்சலி நாயர் இடையேயான காதல் காட்சிகள் பெரியதாக கைகொடுக்கவில்லை. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தாலும் பாடல்கள் பெரிதாக கவரவில்லை.

மாதேஷ் மாணிக்கம் காட்சிகளுக்கு ஒளிப்பதிவு மூலம் உயிர் கொடுக்க பிலோமின் ராஜின் கச்சிதமான எடிட்டிங் படத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளது‌.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதைக்களம்

2. விக்ரம் பிரபு, லால் மற்றும் எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிப்பு.

3. படத்தின் வசனங்கள்

4. ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை

தம்ப்ஸ் டவுன் :

1. இரண்டாம் பாதியில் தொய்வு