T20 World Cup 2020
T20 World Cup 2020

T20 World Cup 2020 – வருகிற 2020-ஆம் ஆண்டு ஐசிசி பெண்கள் உலகக் கோப்பையில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் கொண்ட குழுவில் இணைந்து உள்ளது.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் அலெக்ஸ் ப்ளாக்வெல், இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் பற்றி தனது கருத்தை கூறியுள்ளார்.

“ஹர்மன்ப்ரீத்தின் இன்னிங்ஸை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விஷயம்” என்றார்.

மற்றும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இருக்கும் . மேலும் முழு திறமையை ஆட்டத்தில் வெளிப்படுத்தும் ஹர்மன்ப்ரீத் ஆட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம்” என்றார்.

அடுத்த மாதம் 21-ஆம் தேதி இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே போட்டி என்று பட்டியலில் அறிவிக்கபட்டுள்ளது.

மேலும் அந்த போட்டி பற்றி பேசிய 2018-ன் சிறந்த பெண் வீராங்கனையும், ஆஸ்திரேலிய கீப்பருமான அலிஸா ஹீலி, “ஹர்மன்ப்ரீத் கவுரையும், இந்திய அணியையும் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதான விஷயமல்ல” என்று ஆஸ்திரேலிய அணியை எச்சரித்துள்ளார்.

தற்போது உள்ள ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் கேப்டன் மெக் லானிங், “சொந்த ஊரில் ஆடுவது கூடுதல் மகிழ்ச்சியையும், அழுத்தத்தையும் தரும்” என்றார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பெர்ன், கான்பெரா மற்றும் பெர்த்தில் போட்டிகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.