T20 India vs Australia
T20 India vs Australia

T20 India vs Australia  – இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டியில் தொடர் முடிவின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது.

பேட்ஸ் மேன் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் எந்த மாற்றமும் இல்லை, அதே நேரத்தில் இந்திய வீரர் தவான் ஐந்து இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பெற்றுள்ளார்.

ஆனால், இந்தியாவின் துணை கேப்டன் ரோகித் இரண்டு இடங்கள் சரிந்து 6-வது இடத்தில் உள்ளார்.

மேலும், ராகுல் 2 இடம் பின்தங்கி இப்பொழுது 9-வது இடத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் கோலி தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ளார்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதல் இடதில் உள்ளார். இந்திய சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி தற்போது 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

நடந்து முடிந்த ஆஸ், அணிக்கும் எதிரான போட்டிகளில் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் இந்திய அணிக்காக விக்கெட் எடுத்து தந்த குல்தீப் தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துளார்.