T20 India Loss
T20 India Loss

T20 India Loss – நேற்று நடந்த டி-20 போட்டி வெலிங்டன் னில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி, மோசமான தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் கலந்துக் கொள்கிறது. முதல் போட்டி வெலிங்டனில் நடந்தது.

‘டாஸ்’ வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணியில் ரிஷாப் பன்ட், குர்னால் பாண்டியா இடம் பெற்றனர்.

நியூசிலாந்து அணியில் மன்ரோ, செய்பெர்ட் இணை நல்ல துவக்கம் கொடுத்தது. கலீல் பந்துகளில் மன்ரோ பவுண்டரி, சிக்சர்களாக விலா நியூசிலாந்து 4.4 ஓவரில் 50 ரன்களை எட்டியது. இவர்களை கட்டுப்படுத்த எடுத்த எந்த முயற்சிக்கும் எடுபடவில்லை.

முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவரில் 86 ரன்கள் சேர்த்த போது, குர்னால் பந்து வீச்சில் மன்ரோ 34 ரன்களில் அவுட்டானர் .

மறுபக்கம் செய்பெர்ட், சர்வதேச அரங்கில் முதல் ‘டுவென்டி-20’ அரைசதம் எட்டினார். இவர் 71 ரன்னில் கொடுத்த ‘கேட்ச்சை’ தினேஷ் கார்த்திக் கோட்டை விட்டார்.

நல்லவேளையாக 84 ரன் எடுத்த போது கலீல் ‘யார்க்கரில்’ போல்டானார். மிட்சல் (8), தினேஷ் கார்த்திக்கின் அசத்தல்’ கேட்ச்’ காரணமாக அவுட்டானார்.

கேப்டன் வில்லியம்சன் (34), கிராண்ட்ஹோம் (3), ராஸ் டெய்லர் (23) அடுத்தடுத்து அவுட்டாகினர். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.

சான்ட்னர் (7), ஸ்காட் (20) அவுட்டாகாமல் இருந்தனர். கடின இலக்கைத் கொண்டு இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் இணை சிறப்பான துவக்கம் கொடுக்கவி‌ல்லை.

சர்மா 1 ரன்னுக்கு அவுட்டாகினார். ஸ்காட் ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர், 1 பவுண்டரி அடித்தார் தவான்.

பெர்குசன் பந்தில் பவுண்டரி அடித்த தவான் (29), அடுத்த பந்தில் போல்டானார். சான்ட்னர் வீசிய 2வது ஓவரில் ரிஷாப் பன்ட் (4), விஜய் ஷங்கர் (27) வீழ்ந்தனர்.

அணியை மீட்பர் என நம்பப்பட்ட தினேஷ் கார்த்திக் 5 ரன்கள் , ஹர்திக் பாண்ட்யா 4 ரன்கள் என ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, இந்திய அணி 77 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. பின் தோனி, குர்னால் பாண்ட்யா இணைந்தனர்.

சான்ட்னர் பந்தில் தோனி சிக்சர் அடிக்க, சோதி ஓவரில் குர்னால் பாண்ட்யா தலா ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். இவர் 20 ரன்னுக்கு அவுட்டானார்.

அடுத்து தோனி (39) ‘பெவிலியன்’ திரும்ப இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இந்திய அணி 19.2 ஓவரில் 139 ரன்னுக்கு சுருண்டது.

நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி நாளை ஆக்லாந்தில் நடக்கிறது.