Ind Vs Aus T20

Ind Vs Aus T20 : இந்தியா மற்றும் ஆஸ்., அணிகளுக்கு இடையே 3-வது டி -20 போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்., அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் மழை குறிக்கிடவே வெற்றி சற்று தள்ளி போனது. அந்த வெற்றி இப்பொழுது கிடைத்து உள்ளது.

முதலில் களமிறங்கிய ஆஸ்., அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை கொண்டு களம் இறங்கியது இந்திய அணி. ரோகித் சர்மா மற்றும் தவான் தொடக்க வீரர்களாக இறங்கினர்.

ரோகித் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்,தவான் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய கோலி 61 ரன்களுடன் இறுதி வரை களத்தில் இருந்தார்.

தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ராகுல் வழக்கம் போல் 14 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

இறுதியில், இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி இந்த வெற்றியை தவறவிட்டு இருத்தால் தொடரை முழுமையாக ஆஸ்., அணி வென்று இருக்கும். இப்பொழுது போட்டி சமநிலையில் முடிந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here