மீண்டும் படத்தைப் பார்த்த டி ராஜேந்தர் சரவணன் சுப்பையாவின் புதிய சிந்தனையை திரையுலகிற்கு வரவேற்போம் என பேசியுள்ளார்.

T Rajendhar Review About Meendum Movie : தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்றவர் சரவண சுப்பையா. இவரது இயக்கத்தில் கதிரவன், அனகா, ரவி மரியா, எஸ் எஸ் ஸ்டான்லி, சுபா, கேபிள் சங்கர் என பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” மீண்டும் “. இந்த படம் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த பிரத்யேக காட்சியில் இயக்குனர்களுடன் இணைந்து படத்தை பார்த்துள்ளார் டி ராஜேந்தர். படம் பார்த்து முடித்த பிறகு அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது சரவண சுப்பையா சிட்டிசன் என்ற வெற்றி படத்தை இயக்கியவர் என்பதால் அவருடைய படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதே சமயம் ஏன் அறிமுக நடிகர்களை வைத்து படம் எடுக்கிறார் என்ற சந்தேகமும் இருந்தது. படம் பார்த்த பிறகு தான் தெரிகிறது இன்று நடக்கும், இனி நடக்கப் போகிற யுத்தங்களைகளை வைத்து உருவாக்கி உள்ளார்.

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை : தமிழகத்தில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு

இந்த கொரானா, சுனாமி போன்றவை எப்படி எதிர் நாடுகளால் உருவாக்கப்பட்டதோ அது போன்று கதைக்களத்தை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். அப்பாவாக நடித்துள்ள கதிரவன் மற்றும் அவருக்கு மகனாக நடித்துள்ள அவருக்கும் இடையேயான ஆழமான அன்பு மற்றும் நட்பு உருக வைக்கிறது. அதைப்போல் கதாநாயகி கணவர் மற்றும் இன்னொருவர் மீதும் பாசம் வைத்துக் கொண்டு எப்படி வாழ்வது என தெரியாமல் தவிர்ப்பது மிகவும் யதார்த்தமான உள்ளது. அற்புதமான நடிப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார். அந்த காட்சிகளை பார்க்கும் போது அந்த பெண் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் பரிதாபம் எழுகிறது. படத்தைப் பார்க்கும் போது பல இடங்களில் என்னுடைய கண்கள் குளமாகி விட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறிய பட்ஜெட்டில் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைத்துள்ளது.

இந்த படத்தை மக்களாகிய நீங்கள் தான் ரசித்து வெற்றி பெற வைக்க வேண்டும். பெண் ஹிட்லர் போல நடித்துள்ள சுபாவின் நடிப்பு பயமுறுத்துகிறது. சரவண சுப்பையா ஒரு இயக்குனராக மீண்டும் அவருடைய அடையாளத்தை மிகச்சரியாக செய்திருக்கிறார். நாயகனாக நடித்துள்ளவரை நிர்வாணமாக்கி எடுத்த காட்சிகள் பதைபதைக்க வைக்கிறது. எப்படி எடுத்தார் என யோசிக்க கூட முடியவில்லை. அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்துள்ளார். படத்தில் பார்க்கும்போது அவர் உயிருடன் மீண்டு வந்துவிடுவார் என்ற ஏக்கம் எழுகிறது. ஹாலிவுட் படத்தைப் பார்த்த அளவிற்கு பிரம்மிப்பாக உள்ளது. கத்தி மேல் நடிக்கும் வித்தையை இந்த படத்தில் பார்த்தேன்.

அஜித் பட இயக்குனர் பெண்கள் அமைப்புடன் மோதல் | Meendum Movie | Kollywood |HD

கதிரவன் அந்த கதாபாத்திரமாகவே மாறி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அனகா என்ற பெண் அவருடைய நவரசத்தால் கவர்கிறார். பெண்கள் அமைப்பினர் இரண்டு கணவன் ஒரு மனைவியா என இந்த படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை கேள்விப்பட்டேன். அது போன்ற காட்சிகளை இந்த படத்தில் எடுத்து இருப்பது உண்மைதான். ஆனால் அதனை மிகவும் நாசுக்காக, ஒரு பெண் தடுமாறும் சூழலை அழகாக கையாண்டு இருக்கிறார்கள். இன்று இதை விவாதப் பொருளாக மாறி இருந்தாலும் இன்றைய சூழலில் நடக்கும் உண்மையை தான் படத்தில் கூறியுள்ளார் என பேசியுள்ளார்.

முள் மேல் நடக்கும் யுக்தி, விஞ்ஞானமும் குடும்பமும் கண்களை கலங்கடிக்கிறது.