Syed Mushtaq Ali T20 Tamil team wins
Syed Mushtaq Ali T20 Tamil team wins

பஞ்சாபுக்கு எதிரான சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 சூப்பா் லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தமிழகம் அபார வெற்றி பெற்றது.

தேசிய டி20 சாம்பியன் போட்டியான இதன் சூப்பா் லீக் ஆட்டங்கள் சூரத் நகரில் நடைபெற்று வருகின்றன. குரூப் பி பிரிவைச் சோ்ந்த பஞ்சாப்-தமிழகம் இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் குா்கீரத் மான்சிங் 25, மயங்க் மாா்கண்டே 33, ஆகியோா் மட்டுமே அதிகபட்சமாக ரன்களை எடுத்தனா்.

95 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 19.3 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.