Sye Raa Narasimha Reddy Review | Siranjeevi | Nayanthara | Anushka | Tamannaah | Vijay Sethupathy | Tamil Cinema News | Kalakkal Cinema Review
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, அனுஷ்கா, நயன்தாரா, தமன்னா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Sye Raa Narasimha Reddy Review : 

படத்தின் கதைக்களம் :

இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சிரஞ்சீவி உய்யலவாடா நரசிம்ம ரெட்டியாக நடித்துள்ளார்.

படத்தின் கதை சுதந்திரத்திற்கு முன்பில் இருந்து தொடங்குகிறது, ஆங்கிலேயர்கள் செய்யும் அடக்குமுறைகளை சகித்து கொள்ள முடியாமல் அதை எதிர்க்க வேண்டும் என கோபம் கொள்கிறார். இது குறித்து தன்னுடைய குருவான கோசாயி வெங்கண்ணாவிடம் ( Amithab Bachan ) கூற அவர் இந்த எழுச்சி உன்னிடம் இருந்தால் மட்டும் போதாது, உன்னை சுற்றி இருப்பவர்களிடமும் இருக்க வேண்டும் என கூறுகிறார்.

அதன் பின்னர் மக்கள் மத்தியில் ஆங்கிலேயரை எதிர்த்து போராட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த முயல்கிறார். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

சிரஞ்சீவி தான் படத்தின் மாபெரும் பலம். மொத்த கதையையும் தாங்கி செல்பவர் அவர் ஒருவர் தான். அவருக்கு அடுத்ததாக சுதீப் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

நயன்தாரா சிரஞ்சீவியின் மனைவியாக ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் திறமையான நடிப்பால் கவர்ந்துள்ளார். அனுஷ்கா, தமன்னா ஆகியோரின் நிலைமையும் இதே தான், இருப்பினும் அனைவரின் கதாபாத்திரமும் மனதில் பதியும்படி அமைந்துள்ளன.

விஜய் சேதுபதி தமிழகத்தை சேர்ந்தவர் ஒருவராக போராட்டத்தில் கலந்து கொண்டு போராடுபவராக நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறந்த நடிப்பை கொடுத்திருந்தாலும் சில காட்சிகளிலேயே இடம் பெறுவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

தொழில்நுட்பம் :

இசை :

Julius Packiam இந்த படத்திற்கு பிரமாதமான பின்னணி இசை கொடுக்க Amit Trivedi பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இருவரின் முயற்சியும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவு :

ஆர். ரத்னவேலு தன்னுடைய திறமையான ஒளிப்பதிவால் ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்துள்ளார்.

இயக்கம் :

சுரேந்தர் ரெட்டி கதையை கச்சிதமாக அமைத்து படத்தை கொண்டு சென்றுள்ளார். சிறிய வேடமாக இருந்தாலும் அது மக்கள் மத்தியில் பேச வேண்டிய வேடமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையும் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதை
2. சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் பட்ட கஷ்டத்தை கண்முன் கொண்டு வந்தது
3. ஒட்டு மொத்த நடிகர் நடிகைகளின் நடிப்பு
4. சண்டை காட்சிகள்
5. ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

1. படத்தின் நேரத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

YouTube video

REVIEW OVERVIEW
சைரா நரசிம்ம ரெட்டி விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
sye-raa-narasimha-reddy-reviewமொத்தத்தில் சைரா நரசிம்ம ரெட்டி படம் தேசபக்தியை ஊட்டும் திரைப்படம். பார்த்து பாராட்ட வேண்டிய திரைப்படம்.