Sye Raa Narasimha Reddy : Anushka Shetty | Lady Superstar Nayanthara | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Sye Raa Narasimha Reddy :

நடிகர்களின் ஆளூமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியம்.

ஆனால் தான் அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை உச்ச இடத்திலேயே நிற்கிறார் நயன்தாரா.

தென்னக சினிமாவின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடன் ஜோடி சேர்ந்து விட்டாலும்,

ஒவ்வொரு முறை நயன்தாரா படம் வெளியாகும் போதும் நயன்தாராவுக்காக இந்த படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் சொல்வது தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக அவர் அடைந்திருக்கும் சாதனை.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

தற்சமயம் நயன்தாரா ரஜினி ஜோடியாக தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாகவும் சேரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை அனுஷ்காவும் முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைத்ராபாத்தில் அரங்கம் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.