Sweet Boli
Sweet Boli

Sweet Boli :

ஸ்வீட் போலி செய்முறை :

தமிழ் நாட்டு இனிப்பு வகைகளில் போலிக்கு ஒரு தனி இடம் உண்டு. அதிலும் தற்போது எளிய முறையில் தயாரித்து கடைகளில் விற்க தொடங்கி விட்டனர். அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகையாக உள்ளது.

தேவையான பொருட்கள் :

கடலை பருப்பு – 1 கப்
சர்க்கரை – 1 கப்
உப்பு – தேவைக்கு
நெய் – சிறிதளவு
மைதா மாவு – 1 கப்
அரிசி மாவு – சிறிய கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை :

கடலை பருப்பை வேகவைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு பாத்திரதில் மைதாமவு, அரிசி மாவு மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்துகொள்ள வேண்டும்.

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள கடலைமாவு, ஏலக்காய் தூள் சேர்த்து கை விடாமல் துழைவி லேசாக சுருண்டு ,தண்ணீர் சுண்டியதும் இறக்கிவிட வேண்டும்.

சிறிது நேரம் கழித்து, மைதாமாவு உருண்டையை சப்பாத்தி போன்று தேய்த்து அதில் தயாரித்து வைத்துள்ள கடலைமாவை சிறு உருண்டையாக பிடித்து வைத்து மூடி, அதனை ரொம்ப அழுத்தாமல் லேசாக தேய்த்து எடுத்து அதனை வானலில் போட்டு சுத்தி நெய் போட்டு வேக வைத்து எடுத்தால் இனிப்பு போலி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here