Sweet Basanthi :
Sweet Basanthi :

Sweet Basanthi :

பாயாசம் போன்றே பாஸந்தியும் மிகவும் சுவையான ஒரு பானம். இது அருந்துவதற்கும் பார்பதர்க்கும் அருமையாக இருக்கும். மேலும் மிக சீக்கிரமாக தயாரிக்கபடுவதால் இதனை அனைவரும் விரும்பி ருசிபார்கள்.

தேவையான பொருட்கள் :

1. பால் – 3 லி

2. சர்க்கரை – 1 கப்

3. குங்குமப்பூ – சிறிதளவு

4. நெய் – தேவைக்கு

5. பாதம், முந்திரி, பிஸ்தா – சிறிதளவு

செய்முறை :

அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் காய்சி‌ச்ச வேண்டும். அடி கனமான பாத்திரமாக இருந்தால் மட்டுமே பாஸந்தி நன்றாக வரும். ஏடு கட்ட தொடங்கியதும் அதில் குங்கும பூ சிறிது சேர்த்து கலக்கி வேண்டும்.

பிறகு, பாலை காய்ச்சியதும், அதில் மேல் இருக்கும் ஏடு மற்றும் பாலை தனியாக பிரித்து எடுக்க வேண்டும். இதே போல ஏடு எடுக்க எடுக்க பாலில் அளவு அரை லிட்டராகும் வரை குங்கும பூ சிறிது சிறிதாக கலந்து ஏடை பிரித்து எடுத்து கொள்ள வேண்டும்.

பிரித்த ஏட்டில் சிறிது சர்க்கரை சேர்த்து தீயில் மிதமாக வாட்டி கொள்ள வேண்டும். பிறகு,சிறிய பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் பாதம், பிஸ்தா மற்றும் முந்திரி வறுத்து பாலேட்டில் சேர்த்து ஒரு கிளறு கிளறி காய்ந்து இருக்கும் பாலின் மேல் போட்டு பரிமாறினால் சுவையான பாஸந்தி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here