Swamy Slogans

* ஒரு ஸ்வாமி மந்திரத்தை சத்தம் போட்டு வெளியில் இருப்பவருக்கு தெரியும்படி சொல்லும்போது சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒரு பலனும் இல்லை.

* அதே மந்திரத்தை மனதில் நிறுத்தி தியானிக்கும்போது 80 சதவீதம் பலன் கிடைக்கும். மந்திரத்தினை கோவில், துளசி செடி, வில்வ மரத்தின் கீழ் அமர்ந்து மனதினுள் தியானிக்கும்போது 100% பலன் கிடைக்கப் பெறும்.

* தேவாரம், திவ்யப்பிரபந்தம் போன்ற பக்திப் பாடல்களை ஒருவர் பாட, ஆர்வமுள்ளவர்கள் அவற்றை பின் தொடர்வதால் சுப பலன்களை பெறலாம்.

* சுவாமி மந்திரங்களையும், பாடல்களையும் சத்தமாக பாடும் போது அது மற்றவர்களுக்கு தொல்லையாக இருக்கும் பட்சத்தில் பாவமே விளையும்.

* உங்களது பாடல்களை மற்றவர்கள் உள்வாங்கி, அவர்களும் பாடும்போது வார்த்தை, உச்சரிப்பு சரியாக இல்லாமல் பிழையாக இருக்கும் பட்சத்தில் பாவமே விளையும்.

* திருக்கோவில்களில் கடவுளை தரிசிக்கும் பொழுது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல், மனதார மனதிற்குள் மந்திரங்களைக் கூறி கும்பிட வேண்டும்.

* ஆகவே தனியாக பாடுகையில் அமைதியாகவும், குழுவாக பாடுகையில் சத்தமாகவும், பிழை இல்லாமலும் பாடுவது சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here