சீமான் ஆதரவாளர் பதிவால் எஸ். வி சேகர் பங்கமாக கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பை வெளியிட்டதோடு அமைதியாக இருந்து வருகிறார்.
ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக சீமானின் நாம் தமிழர் கட்சி நீங்கள் கன்னடன்.. எவ்வளவு படங்கள் வேண்டுமானாலும் நடித்து கொள்ளுங்கள். ஆனால் எங்களை ஆள நினைக்காதீர்கள் என கூறி வருகிறார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் ஒருவர் ரஜினி கட்சியை களைத்து விட்டு ஓட வேண்டும், அந்த அளவிற்கு நாம் தமிழர் அரசியலில் டப் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை பார்த்த எஸ்.வி சேகர் அடுத்த ஜோக் சொல்லு தம்பி அதுக்காவது சிரிப்பு வருதானு பார்க்கலாம் என கலாய்த்துள்ளார்.
எஸ்.வி சேகர் சீமான் ஆதரவாளரை காலைத்திருந்தாலும் இது சீமானையும் அவரது கட்சியையும் கலாய்த்தது போலவே நெட்டிசன்கள் பார்க்கின்றனர்.
சூப்பர். அடுத்த ஜோக் சொல்லு தம்பி. அதுக்காவது சிரிப்பு வருதான்னு பாப்போம். https://t.co/yilulD5EjP
— S.VE.SHEKHER???????? (@SVESHEKHER) January 24, 2020