கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடிப்பில் உருவாகியுள்ள சுழல் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
பிரம்மா மற்றும் அனுசரண் முருகையன் உள்ளிட்டோர் இயக்கத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரதாப் போத்தன் என பலர் நடிப்பில் வெப்சீரிஸ் தொடராக வெளியாகி உள்ள கதை தான் சுழல்.
விபத்தில் சிக்கிய நண்பனை காப்பாற்ற 50 லட்சம் பணம் வேண்டும் என்ற காரணத்தினால் இன்னொரு நண்பன் பணத்துக்காக என்னவெல்லாம் செய்கிறார்? அதன்பின் கதைக்களம் எப்படி எல்லாம் சுழல்கிறது என்பதை வைத்துதான் இந்த படம் உருவாகியுள்ளது.
எலக்ட்ரீசியன் வேலை பார்த்துகிட்டு கல்லூரியில் படிக்கிறார் பிரபு. வறுமை காரணமாக வேலைக்குச் சென்று படித்துக் கொண்டிருக்கும் இவர் நண்பர்களுடன் சண்டை ஊருக்கு கிளம்பி செல்ல அங்கு தனது நண்பர் பரத் என்பவரும் தோழி காவேரி என்பவரும் காதலிப்பதை தெரிந்து கொள்கிறார். இந்த நிலையில் காவேரி பிரபுவிடம் என்னையும் ஒரு பெண் காதலித்துக் கொண்டே இருக்கிறார் என சொல்ல அவளை அறிமுகம் செய்து வைப்பதற்காக பரத், காவேரி மற்றும் பிரபு என மூவரும் பைக்கில் செல்கின்றனர்.
எதிர்பாராத விதமாக இவர்கள் விபத்து ஒன்றில் சிக்கி கொள்ள இந்த விபத்தில் காவேரி உயிரை இழக்க பிரபு காயங்களுடன் உயிருக்கு சேதாரமில்லாமல் தப்புகிறார். ஆனால் அவருடைய மருத்துவச் செலவுக்காக 50 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது.
பணத்துக்காக வேலைக்குச் செல்லும் பிரபு அங்கு பிரதாப் போத்தன் குடிபோதையில் தனக்கு மிகப் பெரிய அளவில் பணம் கிடைக்கப் போவதாக உளறுகிறார். பின்னர் பூ அவர் போதையில் அவர் இறந்து விட அவருக்கு வந்த கொரியரைக் கொண்டு கொச்சிக்கு கிளம்புகிறார் பிரபு. அங்கு நடுக்கடலில் நடக்கும் சூதாட்டத்தில் கலந்து கொண்டு பணத்தை வெல்கிறார்.
பிறகு அங்கிருந்து ஊருக்கு கிளம்பும் நேரத்தில் இவரிடம் தோற்றுப் போனவர்கள் பணத்தை பறிக்க முயற்சி செய்கின்றனர். இவர்களை சமாளித்து பிரபு ஊருக்கு வந்து தன்னுடைய நண்பனை காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
இந்த கதை களத்தில் ரன் படத்தில் வரும் வில்லன் இந்த படத்தில் வெறும் போனில் பேசிக்கொண்டே படம் முழுக்க வலம் வர அவர் எதுக்காக வருகிறார் எனத் தெரியாமலேயே போகிறது. என்னதான் சொல்ல வருகிறார்கள் என புரியாமலேயே கதைக்குள் சுழன்று அடிக்கிறார் இயக்குனர்.