Suttu Pidikka Utharavu Movie
பெருகி வரும் வரவேற்பால் சுட்டு பிடிக்க உத்தரவு படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Suttu Pidikka Utharavu Movie : ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் மிஸ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 260 தியேட்டர்களில் வெளியாகி இருந்த திரைப்படம் சுட்டு பிடிக்க உத்தரவு.

இப்படம் விறுவிறுப்பாக திரைக்கதை, எதிர்பாராத கிளைமேக்ஸ் ட்விஸ்ட் என அமைந்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருந்தது.

இதனால் தற்போது தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இப்படம் 360 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டு வருகிறது. இது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தமிழில் கிடைத்த வெற்றியால் தெலுங்குவில் இப்படத்தின் வியாபாரம் அதிகமான தொகைக்கு பேசப்பட்டு வருவதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.