Suttu Pidikka Utharavu Movie Review, Athulya Ravi, Vikranth, Suseenthiran, Mysskin, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Suttu Pidikka Utharavu Movie Review :

ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் மிஸ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சுட்டு பிடிக்க உத்தரவு.

படத்தின் கதைக்களம் :

விக்ராந்திற்கு காசு கேளாத வாய் பேச முடியாத மகள் ஒருவர் இருக்கிறார். இவருடைய ஆபரேஷனுக்காக விக்ராந்த் பணம் இல்லாமல் தவித்து வருகிறார். இதனால் தன்னுடைய நண்பர் சுசீந்திரனுடன் சேர்ந்து ஒரு பேங்கில் கொள்ளையடிக்கின்றனர்.

மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!

அதன் பின்னர் இவர்களை போலீஸ் துரத்த இவர்கள் ஒரு ஸ்லம்மில் நுழைகின்றனர். அங்கு இவர்களது வாகனம் விபத்துக்குள்ளாகி விடுகிறது.

அதன் பின்னர் என்ன நடந்தது? இவர்களால் அந்த ஸ்லம்மில் உள்ள மக்களுக்கு எப்படியெல்லாம் பிரச்சனை ஏற்பட்டது. போலீஸ் இவர்களை பிடித்தார்களா இல்லையா? என்பது இப்படத்தின் மீதி கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

உண்மையில் இப்படத்தின் நாயகன் மிஸ்கின் தான் என்றே கூறலாம். அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பால் நம்மை கட்டி போட்டு விடுகிறார்.

விக்ராந்தின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பது உறுதி, சுசீந்திரனும் அல்டிமேட்டான நடிப்பை கொடுத்துள்ளார். ஸ்லம் பெண்ணாக நடித்துள்ள அதுல்யாவின் கதாபாத்திரம் அற்புதமாக அமைந்துள்ளது.

தொழிநுட்பம் :

இசை :

ஜேக்ஸ் பியானின் பின்னணி இசை பிரமாதம்.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

சுஜித் சராங் ஒளிப்பதிவு மற்றும் ராமராவ் படத்தொகுப்பு என இரண்டும் கனகச்சிதம்.

இயக்கம் :

ராம்பிரகாஷ் ராயப்பாவின் இயக்கம் அருமை. சில இடங்களில் சொதப்பியது போல தோன்ற வைத்தாலும் அந்த சொதப்பல்களுக்கெல்லாம் சரியான விளக்கம் கிளைமேக்ஸ்ஸில் கொடுத்து அசத்தியுள்ளார். அதன் பின்னர் தான் தெரிய வருகிறது அவை சொதப்பல்கள் அல்ல என்பது.

தம்ப்ஸ் அப் :

1. மிஸ்கின், சுசீந்திரன், விக்ராந்த் நடிப்பு
2. இயக்கம்
3. 20 நிமிட கிளைமேக்ஸ்
4. பின்னணி இசை

தம்ப்ஸ் டவுன் :

ஒரு சில லாஜிக்கல் தவறுகள் இருந்தாலும் 20 நிமிட கிளைமேக்ஸ் காட்சிகள் அவைகளை தவிடு பொடியாக்கி விடுகிறது.

REVIEW OVERVIEW
சுட்டு பிடிக்க உத்தரவு விமர்சனம்
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.
suttu-pidikka-utharavu-movie-reviewமொத்தத்தில் சுட்டு பிடிக்க உத்தரவு ஒரு சூப்பரான சூப்பரான திகில் படம்.