Sushant Singh Rajput Death
Sushant Singh Rajput Death

டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த ஹீரோ தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sushant Singh Rajput Death : இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக வலம் வருபவர் எம்எஸ் தோனி. இவரது வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சுகாந்த் சிங் ராஜ்புட். இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வரத் தொடங்கினர்.

விஜய், கார்த்தி, சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள அடுத்தடுத்து இயக்கப் போகும் படங்கள் – செம மாஸ் தகவல் இது!

34 வயதே ஆன இவர் மும்பையில் வசித்து வருகிறார். தற்போது இவர் தன்னுடைய குடியிருப்பின் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்துள்ளார்.

இவருடைய மரணம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மரணத்திற்கு காரணம் என்ன என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.