Sushant Singh Property Details
Sushant Singh Property Details

நிலவில் சொந்தமாக இடம் வாங்கிய முதல் நடிகராக சுஷாந்த் இடம் பெற்றுள்ளார்.

Sushant Singh Property Details : இந்திய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரரான எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோணியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சுஷாந்த்.

சில தினங்களுக்கு முன்னர் இவர் மன உளைச்சல் காரணமாக தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் இது குறித்து பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் சுஷாந்த்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

பிரபல நடிகரின் மரணத்தால் விஜய் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு – வைரலாகி வரும் பதிவு

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் ஏற்கனவே சீரியல் ஒன்றில் நடித்திருந்தார்.

மேலும் இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 7 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். மொத்த சொத்து மதிப்பு 60 கோடியாக உள்ளது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க நிலவில் தனக்கென சொந்த இடம் வாங்கிய முதல் நடிகரும் சுஷாந்த் தான் என்பது தெரிய வந்துள்ளது.

இவருக்கு முன்னதாக ஷாருக்கான் நிலவில் சொந்த இடம் இருப்பவராக இருக்கிறார். ஆனால் அது அவருடைய ரசிகர் அன்பு பரிசாக வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.