Suseenthiran Next

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் தன்னுடைய அடுத்த படத்தை இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளார்.

சுசீந்திரன் தற்போது ஜீனியஸ், சாம்பியன், ஏஞ்சலினா என மூன்று படங்களை இயக்கி வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது சசிகுமார், பாரதி ராஜா ஆகியோரை வைத்து “கென்னடி கிளப்” என்ற படத்தை இயக்க உள்ளார்.

மேலும் பெண்கள் கபாடியை மையமாக கொண்டு உருவாக உள்ள இந்த படத்தில் சூரி, முனீஸ் காந்த், மீனாட்சி, நீது,சௌமியா, சொந்தர்யா என பலர் நடிக்க உள்ளனர். குறிப்பாக நிஜ கபடி குழுவை சேர்ந்த பெண்களே நடிக்க உள்ளனர்.

வில்லனாக நடிக்க வைக்க பாலிவுட் நடிகர் ஒருவரை தேடி வருகிறார்கள். மேலும் இப்படம் வரும் தமிழ் புத்தாண்டில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் மூலம் டி.இம்மான் சுசீந்திரனுடம் நான்காவது முறையாக இணைந்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜீனியஸ் படம் வரும் அக்டோபர் 26-ம் தேதி திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

suseenthiran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here