Surya Vs Sivakarthigeyan
2019 முடிய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாக உள்ளது. இந்த வருடத்தில் அதிக படங்கள் இந்த இரண்டு மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Surya Vs Sivakarthigeyan : வரும் தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் “பிகில்” மற்றும் கார்த்தி நடிப்பில் “கைதி” என இரண்டு படங்கள் வெளியாக உள்ளது.

அதற்கு பிறகு வரிசையாக படங்கள் வெளியாக உள்ளன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்து பிறகு இல்லை என்ற சங்கத்தமிழன் படம் நவம்பர் 15-ல் வெளியாகிறது.

மேலும், அன்று விஷாலின் ஆக்ஷன், தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் உள்ள என்னை நோக்கி பாயும் தோட்ட ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

பிறகு, டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் “ஹீரோ” மற்றும் சூர்யா நடிப்பில் “சூரரைப் போற்று” படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வருட முடிவில் அனைத்து படங்களும் திட்டமிட்ட படி வெளியிட்டு விட வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவரும் மும்முரமாக வேலை செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here