அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விகளுக்கு அதிரடி பதில் அளித்துள்ளார் நடிகர் சூர்யா.

Surya Reply to Anbu mani Ramadoss : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது திரைப்படம் ஜெய் பீம். அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அன்புமணி ராமதாஸ் கேள்விகளுக்கு அதிரடி பதிலளித்த சூர்யா - என்ன சொல்லியிருக்கார் பாருங்க

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் சில சாதி அமைப்பினர் தங்களது சாதியை தவறாக காட்டி இருப்பதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து அந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் சில கேள்விகளை எழுப்பி சூர்யாவை பதில் அளிக்குமாறு கூறி இருந்தார்.

இந்த நிலையில் சூரியா இதற்கு பதிலளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். எந்த ஒரு காட்சியையும் பெயரையும் படத்தில் யாரையும் புண்படுத்துவதற்காக பயன்படுத்தவில்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட பெயர் ஜாதிக்குள் இதனை அடைக்க வேண்டாம். என்னது எழுத்தாளர் வில்லனின் பெயரை வேறு ஒரு மாதிரி விமர்சனம் செய்கிறார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறினால் இதற்கு முடிவே இல்லாமல் தான் செல்லும்.

உலகம் முழுவதன் எனக்கென ரசிகர் பட்டாளம் உள்ளது. சக மனிதர்களுக்காக என்னுடைய பங்களிப்பை செய்து வருகிறேன். சுய விளம்பரத்திற்காக யாருடைய பெயரையும், ஜாதியையும் நான் பயன்படுத்த மாட்டேன். அதற்கான அவசியமும் எனக்கில்லை என கூறியுள்ளார்.