Surya Replay to haters

விமர்சித்தவர்களுக்கு தன்னுடைய வெற்றியின் மூலமாக தக்க பதிலளித்துள்ளார் நடிகர் சூர்யா.

Surya Replay to haters : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றது.

இதுமட்டுமில்லாமல் அகரம் அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி சேவையையும் புரிந்து வருகிறார். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

இந்த நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தப் படம் 2020 இல் அதிகம் பேசப்பட்ட திரைப்படம் என்ற சிறப்பை ட்விட்டரில் பெற்றுள்ளது. கடந்த சில வருடங்களாக வெற்றிக்காகப் போராடி வந்த சூர்யாவிற்கு சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

சூர்யாவின் இந்த சாதனையை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் #KollywoodRularSurya என்ற டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். இந்த டேக்கில் 16 மணி நேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக ட்வீட்டுகள் பதிவாகியுள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.