சாய்பல்லவியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கார்க்கி’ படத்திற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளார் சூர்யா. இப்போ ஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பிறந்தவர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்து திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் நடனத்திற்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள் என்று கூறலாம்.

சாய் பல்லவியின் புதிய திரைப்படம் - போஸ்டரை வெளியிட்டுள்ள சூர்யா.

சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘ஷியாம் சிங்காராய்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சாய்பல்லவி நடித்துள்ள படம் தான் ‘கார்கி’. இப்படத்தை இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது.

சாய் பல்லவியின் புதிய திரைப்படம் - போஸ்டரை வெளியிட்டுள்ள சூர்யா.

மேலும்   கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழங்கியுள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்கான “போஸ்டரை” சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சாய் பல்லவியின் புதிய திரைப்படம் - போஸ்டரை வெளியிட்டுள்ள சூர்யா.

அதனுடன் இப்படத்தை குறித்து “கார்கி” குழுவுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘கார்கி’ திரைப்படத்தில் சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கும். புது சிந்தனைகளும் எழுத்துக்களும் கொண்டாடப்பட வேண்டும். உங்கள் அனைவருக்கும் ‘கார்கி பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார். தற்போது இப்படத்திற்கான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.