சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் பேட்ட படத்தையும் தயாரித்து வருகிறது.

இந்த படங்களை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூர்யாவுடன் இணைய இருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

சூர்யா நடிப்பில் உருவாக உள்ள இந்த படத்தை ஹரி இயக்க இருப்பதாகவும் இது சிங்கம் 4 படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த படத்தை இயக்க ஹரிக்கு ரூ 12 கோடி சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.