கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து வெற்றி வாகை சூடினார் ரித்விகா.

இந்த பிக் பாஸ் வெற்றிருக்கு பிறகு ரித்விகாவுக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ரித்விகா பிக் பாஸ் டைட்டில் வின்னராக சூர்யா தான் காரணம் என தெரிய வந்துள்ளது.

ஆம், நடிகரும் சிவகுமாரும் ரித்விகாவின் அப்பாவும் நல்ல நண்பர்களாம். அதனால் சூர்யா, கார்த்தி, ரித்விகா ஆகியோரும் நண்பர்கள் தானாம்.

சூர்யா தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு போ என கூறி இந்த வாய்ப்பை பெற்று கொடுத்தாக ரித்விகா அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தில் நடிக்க ரித்விகாவுக்கு வாய்ப்பு கிடைத்ததும் இவர்களால் தான் என கூறப்படுகிறது.