சூர்யாவின் பிறந்தநாளில் ரசிகர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Surya Fans Died in Birthday Celebration : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

நடிகர் சூர்யா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருவதால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். பல்வேறு இடங்களில் சூர்யாவின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

அப்படித்தான் ஆந்திராவில் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நசராவ்பேட்டை பகுதியில் சூர்யா ரசிகர்கள் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது அவரது ரசிகர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் ஏற்பட்ட ரசிகர்களின் மரணம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.