Surya and Jyothika in Young Look

சூர்யா, ஜோதிகா ஆகியோர் குழந்தைகளாக மாறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

Surya and Jyothika in Young Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யா 40 மற்றும் வாடிவாசல் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவர் ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போதும் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா மீண்டும் நடிக்க தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இருவரும் குழந்தையாக மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.