Suriya 38

Suriya 38 : இந்தியாவிலேயே தலை சிறந்த நடிகர் சூர்யா என பெண் தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். அந்த தகவல் சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தனக்கென மிக பெரிய ரசிகர்களை பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் மே 31-ம் தேதி NGK திரைப்படம் வெளியாக உள்ளது.

தர்பாரில் யோகி பாபுவுக்காக காத்திருக்கும் ரஜினி – அதற்குள் இப்படியொரு வளர்ச்சியா?

இந்த படத்தை அடுத்து சில மாதங்கள் கழித்து அதாவது ஆகஸ்ட் மாத இறுதியில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படமும் ரிலீசாக உள்ளது.

மேலும் சூர்யா தற்போது இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள தயாரிப்பாளர் குணீத் மோங்கா பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர், இந்தியாவின் சிறந்த நடிகரான சூர்யா மூலமாக தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாவது மிக்க மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

Guneet Monga
Guneet Monga
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.