Surya 37 Title

Surya 37 Tittle : சூர்யா 37 படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்திலும் கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா 37 என்ற பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் கே.வி ஆனந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காப்பான், மீட்பான், உயிர்கா என மூன்று டைட்டில்களை வைத்து ரசிகர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி இருந்தார்.

இதில் ரசிகர்கள் பலர் உயிர்கா என்ற டைட்டிலை தேர்ந்தெடுத்து இருந்தனர். இந்நிலையில் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனவரி 1 காலை 12.10 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டைட்டில் உயிர்கா என்பது உறுதியான தகவல் தான். இந்த போஸ்டர் தான் 12.10 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.