உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இன்னும் சில தினங்களில் முடிவு வர உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார்.

இது படத்தை தொடர்ந்து கமல் மீண்டும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க இருப்பதாக அதிரடி தகவல்கள் கிடைத்துள்ளது.

ஆம் இந்தியன் 2 படத்திற்கு பிறகு இளைய ராஜா, பி.சி.ராம் கூட்டணியில் உருவாகி இருந்த தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஒரு வேலை இந்த தகவல் உறுதியானால் அது கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது.