YouTube video

Suriya’s Soorarai Pottru Movie Total Business

Seenu Ramasamy Wishes to Suriya : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் ஆனால் சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகள் வழியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

மேலும் இந்த படத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில் ரூபாய் 5 கோடியை நற்காரியங்களுக்காக செலவிட இருப்பதாக சூர்யா தெரிவித்திருந்தார்.

தோனி Vs சிவகார்த்திகேயன் : பிரபல இயக்குனர் ஓபன் டாக்..!

இது குறித்து தற்போது இயக்குனர் சீனு ராமசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் திரைப்படம் வெளியீடு செய்த பிறகு நற்காரியங்களுக்கு நன்கொடை தருதல் அறிவோம். ஆனால் 5 கோடி நன்கொடை நன்மைகள் படம் வெளியீடு முன்னே முதல் முறையாக அறிகிறோம்.சூரரைபோற்று PrimeVideoIN வெல்லட்டும். அடுத்த இரண்டு படங்கள் திரையரங்குகளில் ஆளட்டும் வாழ்த்துக்கள் சூர்யா என பதிவிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.