Suriya's plan with Siva film
Suriya's plan with Siva film

தற்போது ஹைதராபாத்தில் இன்னொரு ஷெட்யூலை தொடங்கிவிட்டார்களாம். மேலும் இப்படத்தை நினைத்ததை விட வேகமாக முடிக்க சூர்யா உத்தரவிட்டுள்ளாராம்.

Suriya’s plan with Siva film – சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று. இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து,

சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

வேஷ்டியை மடித்துவிட்டு விமானத்திற்கு முன்பு சூர்யா நிற்பது போன்ற இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.

அஜித்தின் அடுத்த குறி இது தான்; இதுவும் தப்பவே தப்பாது!

மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேசத்தில் துவங்கியுள்ளதாம்.

அங்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு விமானங்கள் பறக்கும் ஜிண்டல் விமான நிலையத்தில் இதன் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது.

இதுபோக தற்போது ஹைதராபாத்தில் இன்னொரு ஷெட்யூலை தொடங்கிவிட்டார்களாம்.

மேலும் இப்படத்தை நினைத்ததை விட வேகமாக முடிக்க சூர்யா உத்தரவிட்டுள்ளாராம். காரணம் அப்போதுதான் சிவா படத்தில் அவரால் முழு கவனம் செலுத்த முடியுமாம்.